வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்பு பவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.

Advertisment

அந்தவிதமாக மூவிபப் பர்ஸ்லிட் கிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது.

surya

இந்த குறும்பட போட்டியில் "கல்கி'-யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான மூன்று லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது...

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், ""ஒரு படம் எடுப்பது சுலபம். ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி. அதையும் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பதை ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்ததுபோல உணர்கிறேன்.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ- இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். "கம்பளிப்பூச்சி' குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, அதைப் பார்த்து ஒருசில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான்.

எது உங்கள் மனதுக்கு நெருக்கமோ அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் ஓப்பனானது. இதில் பாலும் விற்கலாம். கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்'' என்றார் சூர்யா.